தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :8 minutes ago
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான இன்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்த அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.