உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட குவிந்த பக்தர்கள்

அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட குவிந்த பக்தர்கள்

திருத்தணி; கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யப்ப சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்து கொண்டனர்.


சபரிமலை அய்யப்ப சுவாமிக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வருகின்றனர். கார்த்திகை மாதம் முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவர். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று அய்யப்ப சுவாமி கோவிலுக்கு செல்ல மாலை போடுவதற்கு, திருத்தணி– அரக்கோணம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சுந்தர் விநாயகர் கோவிலில் அதிகாலை, 4:30 மணி முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை போட வந்தனர். பக்தர்கள் சுந்தரவிநாயருக்கு சிறப்பு பூஜை நடத்திய பின், அய்யப்ப பக்தர்கள் நீலநிறம், கருப்புநிற ஆடைகள் அணிந்து கோவில் குருக்களிடம் மாலை அணிந்துக் கொண்டனர். 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !