காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :4 hours ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காளஹஸ்தி சிவன் கோயிலில் 40 ரஷ்ய நாட்டு பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை சுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் அதிகாரிகள் அவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் . தரிசனத்திற்குப் பிறகு, கோயில் வளாகத்தில் உள்ள ம்ருத்யுஞ்சய சுவாமி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் ரஷ்ய பக்தர்களை ஆசீர்வதித்தனர், மேலும் கோயில் அதிகாரிகள் சுவாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதத்தை வழங்கினர்.
ரஷ்ய பக்தர்கள் கூறியதாவது; ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், கோயிலில் உள்ள சிற்பங்கள் மிகவும் அழகாக இருப்பாத தெரிவித்தனர்.