பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.24 கோடி
ADDED :4 minutes ago
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.24 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.19) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 804, வெளிநாட்டு கரன்சி 825 எண்ணங்கள், தங்கம் 721 கிராம் வெள்ளி 12.940 கிலோ கிடைத்தது. கல்லூரி மாணவர்கள்,அலுவலர்கள் உண்டியல் எணணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இணை கமிஷ்னர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்றும் (நவ.20) உண்டியல் என்னும் பணி நடைபெற உள்ளது.