கார்த்திகை பிரம்மோற்சவம்; கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
ADDED :31 minutes ago
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் வீதிஉலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் 17 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலை, இரவில் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று வேண்டும் வரங்களை அளிக்கவல்லது கல்ப விருக்ஷ வாகனத்தில், முரளி கிருஷ்ண அலங்காரத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வீதி உலாவுக்கு முன்னால் மாணவ, மாணவிகள் ஆடிவந்த நடனம் பக்தர்களை கவர்ந்தது.