காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்
ADDED :326 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சுந்தராம் பிகை சமேத, கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 56 ஆண்டுகளுக்கு பின், 2வது முறை யாக தெப்போற்சவம் நேற்று இரவு நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், உற்சவர் சுந்தராம் பிகை சமேத கச்சபேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். தெப்பல், ஐந்து சுற்று குளத்தை வலம் வந்து, மீண்டும் வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.