காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி விழா; ஸ்ரீ லலிதா திரிசதி பாராயணம்
ADDED :4 days ago
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய பாராயணம், யாகசாலை பூஜைகள் மற்றும் வேள்வி நடந்தது. 10 மணிக்கு நவாவர்ணம், ஸ்ரீ சண்டிஹோமம், மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு நவாவர்ண பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்காரமும், ஸ்ரீ லலிதா திரிசதி பாராயணமும் நடந்தது. நேற்று கோயில் மண்டபத்தில் உற்சவ அலங்காரத்தில் ஸ்ரீ கமல மஹாகணபதி, ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமி மற்றும் துர்கா காமாட்சி அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.