திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ திருமுறை பயிலும் மாணவர்களுக்கு தீட்சை, ஆசி வழங்கிய ஆதீனம்
மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சித்தாந்தம், சைவ திருமுறை பயிலும் மாணவர்களுக்கு சமய தீட்சை மற்றும் விசேட சிவபூஜை தீட்சை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் அருளி ஆசி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதீனத்தில் 24வது குருமகாசநிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பிரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் சார்பில் தமிழகம், இலங்கை மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் 70க்கும் மேற்பட்ட சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையங்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்கள் தனித்தனி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது. 2 ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இவ்வாண்டு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தீட்சை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜ பெருமான் பூஜை மற்றும் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் பூஜையை தொடர்ந்து ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆண்டிமடம், மதுரை, சேலம் தலைவாசல், தஞ்சாவூர், செங்கம் ஆகிய ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் மற்றும் ஆதீன சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மைய மாணவர்களுக்கு சமய தீட்சை மற்றும் விசேட தீட்சை அருளி ஆசி வழங்கினார். தொடர்ந்து வரும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் அனைத்து மையங்களிலும் பயிலும் மாணவர்களில் 250 பேருக்கு விசேட சிவ பூஜை தீட்சையும், 750 பேருக்கு சமய தீட்சையும் அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பயிற்சி மையங்களின் இயக்குனர்கள், அமைப்பாளர்கள் மற்றும் ஆதீன கண்காணிப்பாளர்கள் செய்துள்ளனர்.