சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; 11ம் சத்ய சாய் உலக மாநாடு துவக்கம்
புட்டபர்த்தி; புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம், சாய் குல்வந்த் ஹாலில் சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா மற்றும் 11ம் சத்ய சாய் உலக மாநாடு இரண்டாம் நாள் விழா சிற்பபாக துவங்கியது. விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக ஆசீர்வாதங்களுடன், ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சிலின் நிர்வாகிகளுக்கான உலக மாநாடு நேற்று நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாள் பிரசாந்தி நிலையத்தின் புனித வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று பிரசாந்தி மந்திரில் காலை 8:00க்கு வேதபாரயணத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. காலை 9:00 மணிக்கு சரிதா ஐயர் சிறப்புறையாற்றினார். தொடர்ந்து காலை 9:15 மணிக்கு இளைஞர்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9:40 மணிக்கு எஸ்எஸ்எஸ்சிடி அறங்காவலர்-டாக்டர் வி மோகன் உறையாற்றினார். காலை 9:50 ஒலி விளக்கக்காட்சியை தொடர்ந்து SSSGC துணைத் தலைவர் நிமிஷ் பாண்டியாவின் உறையாற்றினார். காலை 10:05க்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாபாவின் போதனைகள் மற்றும் அவர் ஆற்றிய தொண்டு பற்றி உறை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டி உரை நடைபெற்றது. ஸ்ரீ சத்ய சாய் ஜீவன உபாதி மற்றும் பஜனைகள், மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது.