உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பிக்கப்பட்ட குருவாயூர் கேசவன் யானையின் சிலை அர்ப்பணிப்பு

புதுப்பிக்கப்பட்ட குருவாயூர் கேசவன் யானையின் சிலை அர்ப்பணிப்பு

பாலக்காடு; குருவாயூர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட கேசவன் யானையின் சிலை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.


கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் 1976ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஏகாதசி நாளில் அதிகாலை கேசவன் என்கிற யானை நோய் வாய்ப்பட்டு உயரிழந்தது. இதனைத் தொடர்ந்து மறைந்த கேசவன் யானையை நினைவூட்டும் வகையில் பிரம்மாண்ட உருவச்சிலை கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏகாதசி உற்சவம் நாளில் கேசவனின் உருவச்சிலை முன்பாக கோவில் யானைகள் அனைத்தும் பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவனின் படத்துடன் வீதி உலா வந்து நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். நடப்பாண்டு நிகழ்ச்சி டிச. 1ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட கேசவன் யானையின் சிலை அர்ப்பணிப்பு நிகழ்த்தி நேற்று நடந்தது. காலை 9.45 மணியளவில் நடந்த நிகழ்ச்சியை கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் துவக்கி வைத்தார். கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு, கோவில் தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், நிர்வாகி அருண்குமார், யானையின் உருவ சிலை புதுப்பித்தல் பணிகள் செய்த சிற்பி எளவள்ளி நந்தன், கேசவனின் சிலையின் புதுப்பித்தல் பணிகளுக்கான செலவை காணிக்கையாக அளித்த மணிகண்டனும் அவரது குடும்பமும் நிகழ்ச்சி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !