கோவை ரேஸ்கோர்ஸ் சத்யசாய் மந்திரில் சாய்பாபா பிறந்த நாள் விழா நிறைவு
ADDED :1 hours ago
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் சத்யசாய் மந்திரில் சத்ய சாய் பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா ருத்ரம் ஜெபிக்கப்பட்டது.
சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் சத்திய சாய் சேவா அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. அவரின் பிறந்த நாளான நேற்று 23ம் தேதி பல்வேறு இடங்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. நிறைவு நாளான இன்று 24ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் சத்யசாய் மந்திரில் பாபாவின் திருஉருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா ருத்ரம் ஜெபிக்கப்பட்டது. நிறைவாக ஆரத்தியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் ஸ்ரீ சத்திய பாபாவை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.