திருச்சானூரில் கல்கி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் அஸ்வ வாகனத்தில் உலா
ADDED :10 minutes ago
திருப்பதி; திருச்சானூரில் கல்கி அலங்காரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் அஸ்வ வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8 ம் நாள் பத்மாவதி தாயார்கல்கி அலங்காரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் அஸ்வ வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலாவின் போது பக்தர்கள் நடனமாடி வாகன சேவையின் முன் சென்றனர். விழாவில் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி உள்பட ஏராளமான கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.