உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் ரூ.2.82 கோடியில் புனரமைப்பு

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் ரூ.2.82 கோடியில் புனரமைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை, காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற இந்த தெப்பல் குளத்தை புனரமைக்க, சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தனையடுத்து, இன்று அடிக்கல் நாட்டி, புதுப்பிக்கும் பணி துவங்கியது. முன்னதாக சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பணியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆஞ்சநேயர் கோவில் தெப்பல் குளத்தில், புதிய சீரமைப்பு திட்டப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ரவிக்குமார் எம்.பி., விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக்அலி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், செயற் பொறியாளர் யோகராஜ், கோவில் அறங்காவலர் குமார், செயல் அலுவலர் வேலரசு முன்னிலை வகித்தனர். கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். குளத்திற்கான சுற்றுச்சுவர், உள்தடுப்பு சுவர், சுற்றிலும் நடைபாதைக்கான பேவர் பிளாக் பிளாட்பாரம் அமைத்து, கைப்பிடியுடன் புதிய கட்டமைப்பு பணிகளும், புதிய கழிப்பிட வளாகம், போர்வெல் மற்றும் குளத்தின் மைய நீராழி மண்டபமும் புதுப்பிக்கப்பட உள்ளது. 9 மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !