உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி அம்பலவாணர் கோயிலில் பாலாலயம்

பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி அம்பலவாணர் கோயிலில் பாலாலயம்

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி அம்பலவாணர் கோயில் புனரமைப்பு திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. இக்கோயிலில் கட்டடங்கள், சிலைகள் சேதமடைந்து அடிப்படை வசதியின்றி இருந்தது. தமிழ் வழியில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. பூமிபூஜை திருப்பணி துவக்க கோயில் குருக்கள் சேகர், தெய்வசிகாமணி, கண்ணன், பிள்ளையார்பட்டி மீனாட்சி சுந்தரம், அரன் பணி அறக்கட்டளை நிறுவனர் பவானி தியாகராஜன், குழுவினர் குமணன், ஸ்தபதி குமார், செயல் அலுவலர் குகனேஸ்வரன் முன்னிலையில் பாலாலயம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !