உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பை சித்தி விநாயகர் கோவிலில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு வழிபாடு

மும்பை சித்தி விநாயகர் கோவிலில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு வழிபாடு

மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.


ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் 26ம் தேதி பிற்பகல் மும்பை வந்தார். மும்பைக்கு வந்தடைந்ததும் பூர்ணகும்பம் மற்றும் வேத முழக்கங்களுடன் சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் காஞ்சி மகா பெரியவர் சிலைக்கு மலர் தூவி வழிபட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய பூஜ்ய ஜகத்குரு சுவாமிகள் நேற்று (27ம் தேதி) எஸ்ஐஇஎஸ் இல் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவிலின் மஹாகும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இன்று (28 ம் தேதி) காலை  மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமிகள் மும்பை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரில் விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !