உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம்நகர் ராமர் கோயிலில் அபங்க சங்கீர்த்தன ஹரிகதை

ராம்நகர் ராமர் கோயிலில் அபங்க சங்கீர்த்தன ஹரிகதை

ராம்நகர்: ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ரகுநாத்தாஸ் மஹராஜின், உயர்ந்த பக்தி என்ற தலைப்பிலான அபங்க சங்கீர்த்தன ஹரிகதை நிகழ்ச்சி நடந்தது.


நிகழ்ச்சி துவக்கத்தில் ரகுநாத்தாஸ் மஹராஜ்பேசியதாவது:


உயர்ந்த பக்தி என்பது, வைராக்யயுக்த பக்திரசம் ஆகும். இது தியாகம் மற்றும் பக்தி இரண்டையும் இணைத்து, எந்தவொரு பற்றற்ற நிலையிலும், சுயநலமற்ற பக்தியை ஏற்படுத்துவதாகும். பற்றற்ற நிலையே உயர்ந்த பக்தியின் அடையாளம். அதனால் பற்றற்ற நிலையை மனிதனின் மனதில் நிலை கொள்ளச் செய்யும் முயற்சியை, அபங்க சங்கீர்த்தனம் ஏற்படுத்தும்.


அதற்காகவே, உயர்ந்த பக்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, தொடர்ந்து அபங்க சங்கீர்த்தன நிகழ்ச்சியை நடத்தி, அதன் வாயிலாக ஹரிகதைகளை சொல்லி, மக்கள் மனதில் பற்றற்ற தன்மையை நிலைநாட்டி வருகிறோம்.


இவ்வாறு அவர் பேசினார்.


ரகுநாத் தாஸ் மஹராஜ் ஹார்மோனியம் வாசித்தபடி, அபங்க சங்கீர்த்தனத்தை துவங்க,உடன் மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட வாத்திய குழுவினர் இசையால் முழங்கினர். திரளான பக்தர்கள் சொற்பொழிவை ரசித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !