ராதா திருக்கல்யாணம்
ADDED :1 hours ago
கடலுார்: கடலுார் சங்கர பக்த ஜன சபாவில் ராதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெரு சங்கர பக்த ஜனசபாவில் 68வது ஆண்டு ராதா திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, உஞ்சவ்ருத்தி பஜனை, அஷ்டபதி பஜனை, திவ்யநாம பஜனை நடந்தது.
நேற்று காலை உஞ்சவ்ருத்தி பஜனை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.