சோமநாதீஸ்வரர் கோவிலில் சோமவார உத்சவம்
ADDED :1 hours ago
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே வெளிகரத்தில், மரகதவல்லி சமேத சோமநாதீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சோமவார உத்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்றாம் திங்கட்கிழமையான இன்று சிறப்பு தரிசனம் நடந்தது. 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைக்கோவிலில் மரகதவல்லி சமேத சோமநாதீஸ்வரரை தரிசனம் செய்தனர். வரும் திங்கட்கிழமை கார்த்திகை நான்காம் வார சோமவார உத்சவத்தில், வெளிகரம் கோவிலில் இருந்து மரகதவல்லி சமேத சோமநாதீஸ்வரர், மலையடிவாரத்திற்கு எழுந்தருளுகிறார்.
சங்காபிஷேகம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்ரமலை மரகாம்பிகை சமேத மரகதேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி, 108 சங்காபிஷேகம் நடந்தது. நாளை பஞ்சாட்ரமலை கார்த்திகை தீப உத்வசமும் நடைபெற உள்ளது.