திருமலையில் கீதா ஜெயந்தி; நாதநீராஜனம் வேதிகையில் கீதா பாராயணம்
ADDED :10 minutes ago
திருப்பதி; கீதா ஜெயந்தியை முன்னிட்டு, திருமலை ஸ்ரீவாரி கோயிலுக்கு எதிரே உள்ள நாதநீராஜனம் வேதிகையில், தர்மகிரி வேதவிஞ்ஞான பீடம் சார்பில், 50 வேத பண்டிதர்கள், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள, 700 சுலோகங்களை பாராயணம் செய்தனர். தர்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தின் அதிபர் ஸ்ரீ சிவ சுப்ரமணிய அவதானி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.