கார்த்திகை செவ்வாய்; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :5 minutes ago
கோவை; கார்த்திகை மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.