காசி விஸ்வநாதர் கோவிலில் 36,000 ருத்ராட்சையில் சிவலிங்கத்துக்கு பூஜை
ADDED :10 minutes ago
கெங்கவல்லி; பிரதோஷம், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று, 50,000 ருத்ராட்சைகளை, மக்கள் வழங்கினர். இரவு, சிவனடியார் குழுவினர், 12 மணி நேரமாக சிவலிங்கத்துக்கு 36,000 ருத்ராட்சைகளை அணிவித்தனர். பின் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, தேவாரம், திருவாசகம் பாடல்களை பக்தர்கள் பாடினர். அவர்களுக்கு கோமதி சக்கரம், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் உருவப்பட ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. மீதி, 14,000 ருத்ராட்சைகளில், மகா மண்டபத்தில் நிரந்தர பந்தல் அமைக்கப்பட்டது.