உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடிய தென்கலை பிரிவினர்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடிய தென்கலை பிரிவினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம் மோத்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்படும். இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தென்கலை பிரிவினரே பாட வேண்டும் என, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடினர். காலை 4:00 மணிக் கு கைசிக துவாதசி புராண படனம் நடந்தது. பின், தென்கலை பிரிவினர் பெருமாளுக்கு பிரபந்தம் பாடினர். தென்கலை பிரிவினர் முதல் இரண்டு வரிசையில் அமர்ந்து பிரபந்தம் பாடினர். மூன்றாவது வரிசையில் அமர்ந்து வடகலை பிரிவினர் பாடினர். எந்தவித பிரச்னையும் இன்றி பிரபந்தம் பாடும் நிகழ்ச்சி மிகவும் அமைதியாக நடந்தது என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !