கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
ADDED :13 minutes ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரணி தீபத்தை முன்னிட்டு நேற்று 1008 விளக்குகள் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி, மூலவர் அம்மன் முன்பு திருவண்ணாமலை கோவிலில் உள்ளது போல் மணலால் மலைகள் மற்றும் லிங்கம் வடிவமைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு கார்த்திகை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், கோவில் முழுவதும் 1008 தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரணி தீபக்குழு தலைவி ஹேமலதா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.