பழநி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
பழநி முருகன் கோயிலில் நவ.27ல் சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. டிச.2 மாலை சாயரட்சைபூஜையில் பரணி தீபம், மூலவர் சன்னதியில் ஏற்றப்பட்டது. சண்முகார்ச்சனை நடைபெற்று மஹா தீபாராதனை நடந்தது. இன்று (டிச.,3.,) திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்து. மேலும் 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. முருகன் கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெறும். மணிக்கு திருகார்த்திகை தீபம், பனை ஓலைகளால் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.