திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா; மலைமேல் மகா தீபம் ஏற்றம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று மலைமேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, காமதேனு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று டிச. 2 காலையில் நடராஜர், சிவகாசி அம்மன் பூறப்பாடு, இரவு 7:15 மணிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று முக்கிய நிகழ்ச்சியான மலைமேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு சொக்கப்பனை தீபக் காட்சி, டிச. 4ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.