கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :130 days ago
கோவை; கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி. பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.