ஏகாம்பரநாதர் கும்பாபிஷேகத்திற்கு ‘சிறப்பு பாஸ்’ பெற பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கோவில் நிர்வாகம்
காஞ்சிபுரம்: ‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு நுழைவு பேட்ச், பாஸ் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப்பின், நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பு நுழைவு பேட்ச், பாஸ் தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்களுக்கு அறி விப்பு பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி. பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.