உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களை வியக்க வைத்த முடியேற்று நடன நாடகம்

பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களை வியக்க வைத்த முடியேற்று நடன நாடகம்

பாலக்காடு; கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த முடியேற்று நடன நாடகம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.


கேரள மாநிலம், பாலக்காடு, பிராயிரி கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஆறாட்டு மகோத்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு டிச. 3ம் தேதி தந்திரி பிரஹ்மஸ்ரீ அணிமங்கலம் வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில் கொடியேறியது. உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9:00 மணி அளவில் கோவில் வளாகத்தில் நடந்த கேரளா பாரம்பரிய கோவில் கலையான முடியேற்று நடன நாடகம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நடன நாடகம் காளி அம்மனுக்கும் தாரிகா என்ற அரக்கனுக்கும் இடையிலான போரின் புராணக் கதையை சொல்கிறது. இந்த நடன நாடகம் அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகும். 2010ல் முடியேற்று நடன நாடகம் யுனெஸ்கோவின் மனித நேயத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உற்சவ நாளான, 10ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, கலச பூஜை, அஷ்டபதி, மஞ்சள் நீராட்டு, பிரஹ்மகலசாபிஷேகம், ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி, அன்னதானம், அம்மன் எழுந்தருளும் வைபவம், நிர்மால்லிய தரிசனம், சந்தன காப்பு, சுற்றுவிளக்கு ஏற்றுதல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !