கிணத்துக்கடவு பால விநாயகர் கோவிலில் ஆண்டு விழா
ADDED :316 days ago
கிணத்துக்கடவு; பால விநாயகர் கோவிலில் நேற்று ஆண்டு விழா நடந்தது. கிணத்துக்கடவு பெரியார் நகரில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் விமர்சையாக நடந்தது. இதில், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், யாகவேள்வி மற்றும் தீர்த்த கலச பூஜைகள் நடந்தது. இதில், கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.