உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீவீரராகவர் கோவிலில் பக்தர்கள் உழவாரப்பணி

திருப்பூர் ஸ்ரீவீரராகவர் கோவிலில் பக்தர்கள் உழவாரப்பணி

திருப்பூர்: மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதியில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. வரும், 30ம் தேதி, பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழாவும், பரமபத வாசல் திறப்பு வைபவமும் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், உழவாரப்பணி நடந்தது. நுாற்றுக்கும் அதிகமான, புனித சேக்கிழார் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று, கோவில் வளாகம் மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !