உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

மதுரை முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

மதுரை; அருள்மிகு மரகதவல்லி உடனாய முத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவிற்கு பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஓம் நமச்சிவாயா என்று மனமுருகி பக்தர்கள் வழிபட்டனர்.


மதுரையில் வருடத்தில் 365 நாட்களும் விழாக்கோலம் கொண்டிருக்கக்கூடிய பழமை வாய்ந்த கோவில் தெப்பக்குளம் எதிரி அமையப்பட்டுள்ள அருள்மிக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் உபகோவிலான மரகதவல்லி உடனாய முத்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்திற்கு உள்ளே உள்ளே யாகசாலையில் கடந்த 6-ம் தேதி முதல் காலையாக பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற யாக பூஜைகளில் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கடம் புறப்பாடாகி மரகதவல்லி உடனான முக்தீஸ்வரர் கோவில் விமான திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது . இதில் மதுரை மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மேளதாளங்கள் முழங்க ஓம் நமச்சிவாயா என மனமுருகி வணங்கிச் சென்றனர். தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் போக்குவரத்திற்கு அனுமதி மருத்துவ நிலையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட திருக்கோவில் நிர்வாகிகள் பங்கு பெற்றனர் . காலை வேளையிலேயே குடமுழுக்கு விழா என்பதால் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !