திருமலையில் புத்தாண்டு தினத்தில் 75 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம்!
ADDED :4661 days ago
நகரி: திருமலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, 75 ஆயிரம் பேர், தரிசனம் செய்தனர். அதிகாலை, 4:00 மணி முதல் காலை, 7:00 மணி வரை, 1,000 ரூபாய், வி.ஐ.பி., டிக்கெட் பெற்ற பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று நள்ளிரவு வரை, 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி, கடந்த, 31ம் தேதி மற்றும் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்த, நித்ய ஆர்ஜித சேவைகள், இன்று முதல் வழக்கம் போல் நடத்தப்படும். 300 ரூபாய், 50 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், வழக்கம் போல அந்தந்த கவுன்டர்கள் மூலம், இன்று முதல் வினியோகம் செய்யப்படும்.அதேபோல், பாத யாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும், "திவ்ய தரிசனம் இலவச டோக்கன்களும் வழக்கம் போல வழங்கப்படும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.