பழநியில் குவிந்த பக்தர்கள்!
ADDED :4764 days ago
பழநி: புத்தாண்டை முன்னிட்டு, பழநியில் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில், தைப்பூசத் திருவிழா விரைவில் நடக்க உள்ளது. இதற்காக பாதயாத்திரை, சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பழநியில் பக்தர்கள் குவிந்தனர். திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகியம்மன், பெரியாவுடையார், பட்டத்து விநாயகர் கோயில்களில், அதிகாலை, 4:00 மணிக்கே, நடை திறக்கப்பட்டது. "ரோப்கார், "வின்ச் க்காக மூன்று மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.