ஒட்டன்சத்திரம் அருகே பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் நேர்த்திக் கடன்
ADDED :78 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
கேதையுறம்பு ஸ்ரீ அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் பூக்குழி இறங்குதல், 32ம் ஆண்டு விழா, அன்னதான விழா நடந்தது. 1008 வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி வளர்க்கப்பட்டு பூக்குழி இறங்கிய திருவிழாவில் முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, பழையபட்டி, நவமரத்துப்பட்டி, சட்டையப்பனூர், வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் சிறுவர்கள், பெரியவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். காலை முதல் இரவு வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகில பாரத சேவா சங்கக் குழுவினர் செய்திருந்தனர்.