உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மகா ருத்ரயாகம் நிறைவு

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மகா ருத்ரயாகம் நிறைவு

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கோவை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன மடம் சார்பில் உலக நன்மை வேண்டி நடத்திய ருத்ரமகாயாகம் நிறைவடைந்தது. 


கோவை மாவட்டம் கூனம்பட்டி ஆதீனம் மகர ஆதிரை மகோத்ஸவம் உலக நன்மை வேண்டி 12 பாடல்பெற்ற சிவத்தலங்களில் ருத்ரமகாயாகம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ருத்ரமகாயாகம் மற்றும் ருத்ர ஜெபம் துவங்கி இருகால யாகம் நடந்தது. இன்று காலை சுப்பிரமணியர் சன்னதியில் சுவாமி,அம்பாள் சார்பில் இரு கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகம் துவங்கியது. 60க்கும் மேற்பட்ட சிவாச்சார்யர்கள் யாகம்,ஜெபம் செய்து மூன்றாம் கால யாகத்தை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் கலசங்கள் யாகசாலையிலிருந்து புறப்பாடாகி சுவாமி,அம்பாள் சன்னதி சென்றது. தொடர்ந்து மூலவர் திருத்தளிநாதர்,சிவகாமிஅம்பாளுக்கு கலசாபிேஷகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் சுவாமி,அம்பாளுக்கு தீபராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !