உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம்

திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இது ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் சந்நிதிக்கு பெயர் பெற்றது, அனுமன் ஜெயந்தி நாளில் இங்கு ஆண்டுோறும் ஆயிரக்கணக்கான வடைமாலைகள் சாற்றப்பட்டு, பக்தர்களால் சிறப்பாக வழிபடப்படும் ஒரு முக்கிய ஆஞ்சநேயர் தலமாகும். கோவில் முக்கிய அம்சங்கள் மூலவர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் (ஐந்து முகங்கள் கொண்ட ஆஞ்சநேயர்).


சிறப்பு: அனுமன் ஜெயந்தி விழாக்கள், வடை மாலை சாற்றுதல் போன்ற நிகழ்வுகள் இங்கு பிரபலம்.


வழிபாடு: இந்த கோவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இக்கோவில், எதிரே பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள் திருப்பதி சீனிவாச பெருமாளைப் போல காட்சி தருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இந்தக் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 5,008 வடமாலையுடன் கடந்த 18 ஆண்டுகளாக அனுமந் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்து வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு விஸ்வரூப பஞ்சமூக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் அனுமந் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முறையே 67,000, 69,000, 71,000 வடமாலையில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். இந்த ஆண்டு 73,000 வடமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்கள் அருள்பாலிப்பார்.


செல்லும் வழி: சென்னையிலிருந்து சுங்குவார் சத்திரம் சென்று திருப்பந்தியூருக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !