பழநி கோயிலில் 2 நாளில் 85 லட்ச ரூபாய் வசூல்!
ADDED :4664 days ago
பழநி: பழநி கோயிலில் டிச.31 மற்றும் ஜன.,1ல் தரிசனம், அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 85 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. ங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக பழநி கோயிலில் பாதயாத்திரை, ஐயப்ப, முருக பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் வந்தனர். தரிசனதிற்காக 5 மணி நேரம் காத்திருந்தனர். மலைகோயில், கிரிவீதிகளில் உள்ள ஸ்டால்களில் பஞ்சாமிர்த விற்பனை, தரிசன, தங்கரத, அர்ச்சனை, அபிஷேக, ரோப்கார், வின்ச், முடிக்காணிக்கை டிக்கெட்டுகள் விற்பனை ஆகியவற்றின் மூலமாக 85 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. இதில் உண்டியல் வசூல் அடங்காது.