கிராம தேவதையாக காட்சியளிக்கும் பார்வதி
கொப்பால் மாவட்டம், கங்காவதியின் ஆனேகுந்தி கிராமம் அருகில் உள்ள சிக்கராம்புராவில் அமைந்து உள்ளது ஸ்ரீ ஜெயலட்சுமி கோவில். ராமாயணத்தில் ராமர் –- லட்சுமணர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது, ‘பம்பா சரோவரா’வில் குளித்ததாக நம்பப்படுகிறது. புராணங்கள்படி, பார்வதி தேவி சிவனின் அருள் பெற, பம்பா சரோவரா அருகில் கடும் தவம் மேற்கொண்டார். இவரின் ஆன்மிக சக்தி, இப்பகுதி முழுதும் பரவி உள்ளதாக நம்பப்படுகிறது.
சிக்கராம்புரா சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள், லட்சுமிதேவியை தங்கள் குலதெய்வமாகவும், தங்களை காக்க வந்த கிராம தேவதையாகவும் கருதுகின்றனர். அனைத்து இடர்களில் இருந்தும் பாதுகாத்து வருவதால், அவரை, ‘ஸ்ரீ ஜெயலட்சுமி தேவியாக’ வணங்கி வருகின்றனர். ஜெயலட்சுமி தேவியின் அருள், தங்கள் விவசாய நிலத்தை இயற்கை பேரிடரில் இருந்து காப்பாற்றுவதுடன், கிராமம் செழிப்புடன் இருக்க உதவுவதாக கூறுகின்றனர். இது தவிர, பம்பா சரோவர் வரும் யாத்ரீகர்கள், ஜெயலட்சுமி தேவியை தரிசிப்பதால், தங்களுக் கு லட்சுமியின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைப்பதாக நம்புகின்றனர். இக்கோவில் கருவறையில் ஸ்ரீ ஜெயலட்சுமி தேவி, சக்தி வாய்ந்த மற்றும் கருணைமிக்க வடிவமாக காட்சி அளிக்கிறார். தீய சக்தியில் இருந்து தங்களை காப்பது மட்டுமின்றி, அதிர்ஷ்டத்தை தருவதாகவும், வாழ்க்கையில் நிம்மதி தருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
இக்கோவிலின் கட்டட கலை, கர்நாடகாவின் பாரம்பரிய கட்டட கலையை பின்பற்றி க ட்டப்பட்டு உள்ளது.கோவில் முன் துவஜ ஸ்தம்பம் உள்ளது. விசாலமான முற்றம், தியானம் செ ய்ய இடம், பிரார்த்தனை, அமைதியான சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கோவில் அருகில் உள்ள பம்பா சரோவர், புனித நுால்களில் குறிப்பிட்டுள்ள ஒன்றாகும். அமைதியான இந்த குளம், ராமாயணத்துடன் தொடர்புடையது. ஸ்ரீராமர் தனது வயதான பக்கையான சபரியை, இந்த குளம் அருகில் சந்தித்ததாக கூறப்படுகிறது. ஜெ யலட்சுமி தேவிக்கு வெள் ளிக்கிழமை தோறும் குங்குமம் அர்ச்சனை, எலுமிச்சை மாலை அணிவிக் கப்படுகிறது.
ஆண்டு திருவிழாவின் போது சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 9_Artifcle_0001, 9_Artifcle_0002, 9_Artifcle_0003 கோவில் முன்புள்ள பம்பா சரோவர். (அடுத்த படம்) ஸ்ரீ ஜெயலட்சுமி தேவி கோவில். (கடைசி படம்) ஜெயலட்சுமி தேவி
எப்படி செல்வது?: பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், கொப்பால் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 41 கி.மீ., தொலைவில் உள்ள ஆனேகுந்திக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், கொப்பால் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 41 கி.மீ., தொலைவில் உள்ள ஆனேகுந்திக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
திருவிழா: நவராத்திரி, வருடாந்திர திருவிழா
கோவில் திறப்பு: காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை. – நமது நிருபர் -–