உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமந்தி பூ அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன் அருள்பாலிப்பு

சாமந்தி பூ அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன் அருள்பாலிப்பு

ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார். மார்கழி மாத செவ்வாய் கிழமையொட்டி, இன்று காலை 5:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, பலவித திரவியங்களால் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரங்கள் நடந்தன. இதையடுத்து, காலை 6:00 மணிக்கு மயில் மண்டபத்தில் மார்கழி சிறப்பு யாகம் நடந்தது. இதனை தொடர்ந்து, சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !