உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயிலில் ஜன.7ல் மார்கழி நீராட்ட விழா துவக்கம்!

ஆண்டாள் கோயிலில் ஜன.7ல் மார்கழி நீராட்ட விழா துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி நீராட்ட உற்சவம், ஜன.,7ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 9மணிக்கு ஆண்டாள் ,பெரிய பெருமாள் மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, கோபுர வாசலிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின், ஸ்ரீனிவாசன் சன்னதியில் எழுந்தருளி எண்ணெய் காப்பு மண்டபம் சேர்ந்து, தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணிக்கு, எண்ணெய் காப்பும், நீராடும் மண்டபத்தில் எழுந்தருளலும், நீராட்டும் நடக்கிறது. தொடர்ந்து, வெள்ளி பந்து கொண்டு அம்மானை விளையாட்டு நடக்கிறது. இரவு 8 மணிக்கு, துளசி வாகனத்தில் ஆண்டாள் புறப்பாடுடன், விழா ஜன.,14ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் ஆண்டாள், தங்கப்பல்லக்கில் கள்ளழகர், கண்ணன், பெரிய பெருமாள் கோலங்களில் எழுந்தருளி, வீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !