/
கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் வளர்பிறை பஞ்சமி பூஜை: மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
உத்தரகோசமங்கையில் வளர்பிறை பஞ்சமி பூஜை: மஞ்சள் அரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :102 days ago
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் வராகியம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள ஏராளமான அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்தினர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.