வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED :279 days ago
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வளர்பிறை பஞ்சமி யாக பூஜையை பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதானம் வழங்கினர்.