உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி உற்சவம்: சக்தி மாரியம்மன் கோயிலில் பிரம்மாண்ட கோலம்

மார்கழி உற்சவம்: சக்தி மாரியம்மன் கோயிலில் பிரம்மாண்ட கோலம்

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் முன்பு மார்கழி மாத உற்சவத்தையொட்டி பெண்கள், தினசரி பிரம்மாண்ட கோலமிட்டு வருகின்றனர்.


மார்கழி மாத உற்சவத்தையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் தினசரி காலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விழாவையொட்டி சக்தி மாரியம்மன், தினசரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோயிலின் முன்புறம் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் இந்திய நாட்டின் கலை, கலாச்சாரம், பக்தி உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் தினசரி பிரம்மாண்ட கோலமிட்டு வருகின்றனர். கோயிலின் முன்பு நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை நினைவு படுத்தும் வகையில், 15 அடி நீளம், 10 அடி அகலத்தில் தீப அலங்காரத்தில் பெண்கள் கோலமிட்டனர்.


இது குறித்து தினசரி கோலமிட்டு வரும் பெண்கள் கூறுகையில், மார்கழி மாத உற்சவத்தையொட்டி மார்கழி மாதம் முழுவதுமே இது போன்ற கோலத்தை வரைய திட்டமிட்டுள்ளோம். தினசரி காலை, 4:00 மணிக்கு தொடங்கி, 5:00 மணி வரை கோலமிடும் பணியை செய்து வருகிறோம். இதனால் ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. வீட்டு குழந்தைகளையும் கோவில் முன்பு, கோலம் வரைவதில் ஆர்வத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !