உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் புலி வாகனத்தில் சுவாமி வீதி உலா

கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் புலி வாகனத்தில் சுவாமி வீதி உலா

கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் நடந்தது.சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா நடைபெறுகிறது.இதனைமுன்னிட்டு மின்னொலி அலங்கார ரதத்தில் புலி வாகனத்தில் வில் அம்புடன் ஐயப்பன் அருள் பாலித்தார்.அப்போது கோட்டைமேட்டில் இருந்து கமுதி பஸ் ஸ்டாண்ட்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உட்பட முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்றனர்.அப்போது பொதுமக்கள் பூஜை பொருட்களுடன் வரவேற்றனர்.பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை குருநாதர் லெட்சுமணன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்தனர். கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஐயப்ப சாமிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !