நத்தம் வேலம்பட்டி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :38 minutes ago
நத்தம்; நத்தம் வேலம்பட்டி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அய்யப்ப சுவாமி படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது. பின்னர் இதில் கலந்து கொண்ட அய்யப்ப பக்தர்கள் பஜனை நடத்தினர்.முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் காந்திநகர், காமராஜர் நகர் பகுதிகளில் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.