சென்னையில் கண் திறந்த மகாலட்சுமி அம்மன் சிலை!; பக்தர்கள் பரவசம்
ADDED :17 minutes ago
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் திறந்ததாக ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
வடசென்னை தண்டையார்பேட்டையில் உள்ளது அருட்கோட்டம் முருகன் கோவில். இங்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவர். இக்கோவிலில் மகாலட்சுமி அம்மன் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த மகாலட்சுமி சிலையின் கண் திறந்ததாக செய்து பரவியது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பரவசத்துடன் அம்மனை வழிபட்டு சென்றனர். பலர் அம்மன் சிலையை படம் பிடித்தும் சென்றனர். இதனால் கோவிலில் பரபரப்பு நிலவியது.