மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா
மானாமதுரை; மானாமதுரை தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு உற்சவர் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மானாமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் கார்த்திகை 1ம் தேதி நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். இதையடுத்து வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பஜனை நடத்தி வந்தனர். நேற்று நடைபெற்ற மண்டல பூஜை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு உற்சவர் ஐயப்ப சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்ட பிறகு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு யானை வாகனத்திற்கு எழுந்தருளினார். ரதத்தை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் 4 ரத வீதிகளில் வழியே மற்றும் முக்கிய வீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை வந்டைந்தது. ரதத்திற்கு முன்பாக மேல தாளங்கள் வானவேடிக்கைகள் முழங்க சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடி சென்றனர். மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்ட பிறகு பஜனை அன்னதானம் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமிகள்,பக்தர்கள் செய்திருந்தனர்.