வென்னிமலை கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :4664 days ago
பாவூர்சத்திரம்: வென்னிமலை முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வென்னிமலை கோயில் வளாகத்தில் உள்ள செல்வ விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. எண்ணெய் காப்பு, கங்கா தீர்த்தம், வாசனை திரவியங்களுடன் சந்தனம், அபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.