நத்தம் அருகே உலுப்பகுடி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :110 days ago
நத்தம்; நத்தம் அருகே உலுப்பகுடி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி அய்யப்ப சுவாமிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.அய்யப்ப பக்தர்கள் கூட்டாக பஜனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.