உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புட்குழி கோவில் சுவரில் வளர்ந்திருக்கும் ஆலமர கன்றுகளால் வலுவிழக்கும் அபாயம்

திருப்புட்குழி கோவில் சுவரில் வளர்ந்திருக்கும் ஆலமர கன்றுகளால் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் மதில் சுவர் மற்றும் மரகதவல்லி தாயார் சன்னிதி கோபுரத்தின் மீது ஆலமரக் கன்றுகள் வளர்ந்து வருவதால், கட்டடம் விரிசல் விட்டு வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு, ஜடாயு தீர்த்த குளத்தில், இறந்தவர்களுக்கு திதி அளித்து வருகின்றனர். இந்த கோவிலை சுற்றிலும் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. குறிப்பாக, கோவில் மதில் சுவர் மற்றும் மரகதவல்லி தாயார் சன்னிதி கோபுரத்தின் மீது ஆலமரக் கன்றுகள் வளர்ந்துள்ளன. இந்த ஆலமரக்கன்றுகள் பெரிதானால், கோவில் கோபுரம் மற்றும் கட்டடம் விரிசல் விட்டு வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, விஜயராகவப் பெருமாள் கோவில் மரகதவல்லி தாயார் சன்னிதி கோபுரம் மற்றும் மதில் சுவர் மீது வளர்ந்திருக்கும் ஆலமர கன்றுகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !